இலங்கையில் விரைவில் புர்கா தடை

0

இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று கையெழுத்திட்டார் என அறியமுடிகின்றது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்காவத தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு புர்கா தடை குறித்த பரிந்துரையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.