கோவிட் தொற்றாளிகளின் அதிகரிப்பை அடுத்து வைத்தியசாலைகளின் கொள்ளளவுக்கு மேலதிகமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்திய கலாநிதி பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடருமாக இருந்தால் அது இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு சமனாக இலங்கையின் நிலைமையும் மாறக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே உடனடியாக மாற்று திட்டங்கள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நோய் அறிகுறி அற்றவர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை என்ற அரசாங்கத்தின் திட்டம் சிறப்பானது என அவர் தெரிவித்தார்.