இலங்கையில் வைத்தியர்களையும் விட்டு வைக்காத கொரோனா

0

இலங்கையில் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் வைத்தியர்கள் மூவரும் உள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மாவனெல்ல பிரதேசத்தில் வைத்தியர்கள் இருவர் மற்றும் கேகாலை பிரதேச வைத்தியரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இந்த வைத்தியர்கள் மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அத்தனகல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடைய எழுவாப்பிட்டிய பிரதேச விகாரையின் பௌத்த துறவிகள் நான்கு பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். விகாரையிலுள்ள மேலும் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.