இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் .
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, குருநாகல், கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, ரத்தினபுரி , காலி, மாத்தறை உள்ளிட்ட 10 மாவட்டங்களின் வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல் ஏற்படும் போது சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்த வெளி நீர் நிலைகள் போன்ற திறந்த பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் கம்பி தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன் ஈருருளி ,உழவுயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.