இலங்கையில் 12ஆவது கொரோனா உயிரிழப்பு பதிவு

0

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 12 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண், கொரோனா தெற்றுக்குள்ளான நிலையில், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உயிரிழந்த பெண் ஏற்கனவே புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது