இலங்கையில் 14 நாட்களுக்கு கடுமையான பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை!

0

இலங்கையில் 14 நாட்களுக்கு கடுமையான பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மருத்துவ பீடத்தின் சமூக வைத்திய திணைக்களத்தின் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.