இலங்கையில் 17 சிசுக்கள் உட்பட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு!

0

இலங்கையில் இதுவரையில், 17 சிசுக்கள் உட்டபட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் இதுவரையில் 18 வயதுக்குக் குறைவான 69 ஆயிரத்து 130 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுடைய 17 சிசுக்களும் ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு இடைப்பட்ட வயதுடைய 17 சிசுக்களும் ஒரு வயது முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 13 சிறுவர்களும் 6 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட 12 சிறுவர்களும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட 5 சிறுவர்களும் 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்களும் இவ்வாறு தொற்றினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் கபில ஜயரத்ன பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.