இலங்கையில் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி – அரசாங்கம்

0

தடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக 18-30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஏற்கனவே, 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.