இலங்கை அரசாங்க இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

0

இலங்கை அரசாங்கத்தின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கும் இலங்கையின் சீன தூதரக இணையத்தளத்திற்கும் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் பாதிக்கப்பட்ட இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை மேற்கொள்ளபட்ட இந்த சைபர் தாக்குதல் தொடர்பில் விமானப்படையினர் சைபர் பாதுகாப்பு, இலங்கை கணினி அவசர பிரிவிற்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடக பேச்சாளர் கெப்டன் துஷான் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.