இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

0

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் தென்னிந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.