இலங்கை கடற்பரப்பில் கொட்டிக் கிடக்கும் அதிஷ்டம்! எடுக்கும் முயற்சியில் அரசாங்கம்

0

இலங்கையில் மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு அகழ்வு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த இந்த நடவடிக்கையை மீண்டும் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதென அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அகழ்வுகளை மீண்டும் தொடங்க பெற்ரோலிய வள மேம்பாட்டு செயலகத்திற்கு இரண்டு புதிய அதிகாரிகளை அரசாங்கம் நியமித்துள்ளது.

இந்த இரு அதிகாரிகளுக்கும் உலகம் முழுவதும் இந்தத் துறையில் விரிவான அனுபவம் உண்டு. அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் பணியாற்ற அவர்கள் விருப்பம் தெரிவித்திருப்பது விசேட அம்சமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடற்பரப்பில் பெருந்தொகையான எண்ணெய் வளம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை விடவும் இங்கு அதிகளவான வளம் உள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அதனை உரிய முறையில் பெற்றுக்கொண்டால் உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியம் என கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.