இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது விளிம்பில் இல்லை -சுகாதார அமைச்சு

0

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதென என கூறுவதற்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏதும் இல்லை என இலங்கை மருத்துவ சங்கம் கூறியிருந்தது.

இந்த கருத்துக்களுக்கு பதிலளித்த சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துதாவா, தற்போது நாடு மூன்றாவது அலைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து அதை விளக்கும் வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் தொற்றுநோயியல் பிரிவில் உள்ள தரவு மற்றும் புள்ளிவிபரங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.