இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் இலங்கைக்கு குந்தகம் விளைவிக்கும்

0

இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் இலங்கைக்கு குந்தகம் விளைவிக்கும் என ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சி.ஏ.சந்திரபிரேமா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய தீர்மானத்தை வழக்கம் போல இலங்கை நிராகரிப்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக 21 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன.

அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.