இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு தடை – அரசாங்கம்

0

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பி.பி.சி.க்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,“ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடாளுமன்றத்தில்  புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது.

அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்பவர், இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர்

ஆகவே இலங்கை நாடாளுமன்றத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.

மேலும், நாடாளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.