இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவில் புதிய நடைமுறை

0

பிரித்தானியாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான (அல்லது அவ்வாறு கருதப்படும்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை பிரஜைகள் அதன் விளைவாக, இலங்கை திரும்பும் போது துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம் இருப்பதை விபரிக்கும் விதத்தில் KK & RS (Sri Lanka) என்னும் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் மேல் தீர்ப்பாயம் (IAC) நாடு சார்ந்த புதிய வழிகாட்டுதலை (New Country Guidance) வெளியிட்டுள்ளது.

ஜி.ஜே மற்றும் ஏனையவர்கள் (உள்நாட்டுப் போருக்குப் பின்: நாடு திரும்புவோர்) இலங்கை CG (2013) UKUT 00319 (IAC) என்ற வழக்கில் முன்னர் கொண்டுவரப்பட்ட நாடுசார் வழிகாட்டுதலை இந்தத் தீர்ப்பு மறுவடிவமைப்பு செய்கின்றது.

அத்துடன் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் மற்றும் தனி நாட்டினை ஆதரிக்கும் செயற்பாடுகளிலும் நினைவு நிகழ்வுகளில் ஈடுபடுவோர் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய கண்ணோட்டத்தினையும் இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகின்றது.

இலங்கை அரசாங்கம் சர்வாதிகாரப் போக்குடைய ஆட்சியினையே நடாத்துகின்றது என்பதை மேல் தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. இலங்கையினுள் பிரிவினைவாத இயக்கம் எதுவும் மீண்டும் எழுச்சி பெறுவதை தடுப்பதில் அது பிரதான கவனம் செலுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் வன்முறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கும் மற்றும் வன்முறையற்ற அரசியல் ஆதரவு நடவடிக்கைகளுக்கும், அது மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கும் மற்றும் இலங்கையில் பயங்கரவாத அமைப்புக்களாக தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கும் இடையில் இலங்கை அரசாங்கம் எந்தவித வேறுபாட்டினையும் கண்டுகொள்ளவில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக பொத்துவில் எதிர்மறை மனநிலையினைக் கொண்டிருப்பதால், தடை விதித்தல் என்பது ஒப்பீட்டளவில் முக்கிய ஆபத்துக் காரணியாக கருதப்பட்டாலும் இலங்கையில் ஒருவர் துன்புறுத்தலுக்கு முகம்கொடுப்பாரா என்பதை அது தீர்மானிக்காது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)உள்ளிட்ட பிரித்தானியாவில் இயங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின (LTTE) முன்னணி அமைப்புக்களாக இலங்கை அரசாங்கத்தினால் கருதப்படுவதுடன் அவை இலங்கை அரசாங்கத்தினால் விரோத மனப்பாங்குடனேயே பார்க்கப்படுகின்றன.

தமிழர் பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவோரை இனங்கண்டுகொள்ளும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தமது புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துகின்ற, அதாவது ஒருவரை துன்புறுத்தல் ஆபத்திற்குள் தள்ளும் செயற்பாடுகளை மேல் தீர்ப்பாயம் முக்கியமாக இனங்கண்டுள்ளது.

பெயர் குறித்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் ஈடுபாடு கொண்டிருப்பதை விட, கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளல், புலிச்சின்னத்தினை கொண்டுள்ள கொடிகளை அல்லது பதாகைகளை ஏந்துதல், நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்ளல், பயனுள்ள நிதி சேகரிப்பில் ஈடுபடுதல், சமூக வலைத்தள ஊடகங்களில் பிரசன்னமாதல், மனுக்களில் கையெழுத்திடல் போன்றன அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் என இலங்கை அரசாங்கத்தினால் கருதப்படுகின்றது.

உள்விவகார அலுவலகம் அடிக்கடி பரிந்துரைத்த நிலைப்பாட்டுக்கு மாறாக, ஓர் அமைப்பில் தான் உத்தியோகபூர்வமான நிலையில் இருப்பதாகவோ அல்லது அவர்களுடைய செயற்பாடு பிரபல்யமானது என்றோ காட்டி ஒருவர் தான் தமிழர் பிரிவினைவாதத்தில் “முக்கிய பங்கு வகித்தேன் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குட்படுகின்ற செயற்பாடுகளை அடையாளப்படுத்தும் அணுகுமுறை கருத்திலெடுக்கப்பட வேண்டும்.

நாடுசார் வழிகாட்டுதல் தொடர்பான வரையறையில் அகதிகள் சட்டத்தின் பரந்துபட்ட விதிமுறைகளை பிரயோகிக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு முக்கியமாக வலியுறுத்துகின்றது. அத்துடன் RT (Zimbabwe)  UKSC 38 இல் உறுதிப்படுத்தப்பட்டதைப் போல் HJ (Iran)  UKSC 31 இலுள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் அடையாளப்படுத்தியுள்ளது.

அதாவது, துன்புறுத்தலில் இருந்து தப்புவதற்காக ஒருவர் தனது உண்மையான அரசியல் நம்பிக்கையினை மறைக்க அல்லது மாற்ற வேண்டியேற்பட்டால் அவர்கள் சர்வதேச பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள்.

மேல்முறையீட்டாளர்கள் இருவரும் தமது மேல்முறையீடுகளில் வெற்றிபெற்றுக்கொண்டனர். அவர்கள் அர்ப்பணிப்புள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இலங்கைக்கு திரும்பிச் சென்றால் அவர்களுக்கு அங்கே துன்புறுத்தலுக்கான ஆபத்து உள்ளது என்பதையும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சட்டத்தின் சரத்து 3 இன் கீழ் உள்ள அவர்களின் உரிமை மீறப்படுவதற்கான ஆபத்து உள்ளது என்பதும் கண்டுகொள்ளப்பட்டது. HJ (Iran) இன் அடிப்படையில் இரு மேன்முறையீட்டாளர்களும் வெற்றிபெற்றனர்.

மேன்முறையீட்டாளர் KK சார்பாக Birnberg Peirce SolicitorsI சேர்ந்த அருண் கணநாதன் அவர்களால் Alasdair Mackenzie   மற்றும் Antonia Benfield  ஆகியோர் அறிவுறுத்தப்பட்டனர். மேன்முறையீட்டாளர் RS சார்பாக JCWI இனைச் சேர்ந்த லோறா ஸ்மித் அவர்களால் Alasdair Mackenzie மற்றும் Garden Court Chambers ஐ சேர்ந்த Ali Bandegani ஆகியோர் அறிவுறுத்தப்பட்டனர்.

வழக்குகளில் ஈடுபடும் சட்டவாளர்களுடன் இந்த தீர்ப்புத் தொடர்பாகவும் ,அதன் பிரயோகம் தொடர்பாகவும் கலந்துரையாட Doughty Street Chambers ஓர் கருத்தரங்கினை திங்கள் 14 யூன் 2021 அன்று மேற்கொள்ளவுள்ளது.