களுவாஞ்சிகுடி நகரின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரிப்பிடம் எவ்வித பராமரிப்பும் இன்றி அருவருக்கத்தக்க நிலையில் காட்சியளிப்பதனால் பயணங்களுக்காக வரும் பயணிகள் அருகில் உள்ள பனைமர நிழலில் ஒதுக்கி நின்று தமது பயணத்தை தொடரும் அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
நீண்ட தூர பயணத்திற்க்கென வரும் பயணிகள் தமது பொதிகளை சுமந்து நின்றவண்ணம் பேருந்தின் வருகைக்காக காத்து நிற்கவேண்டியுள்ளது .
பயணிகள் அமர்வதற்க்கான ஆசனம் இன்றியும், மலசல கூடம் சுத்தமின்றியும் மின் விசிறிகள் இயக்கமில்லாத நிலையில் மிக மோசமாக காணப்படும் இந்த பேருந்து நிலையத்தின் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இது வரை முன்னெடுக்க வில்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர், .
அத்தோடு பேருந்து தரிப்பிடத்திற்க்கும் களுதாவளை பிரதேச சபைக்குமிடையிலான தூரம் வெறுமனே மூன்று கிலோமீற்றர் தூரமெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
குறித்த பேருந்து தரிப்பிடம் மிக அண்மைக்காலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.