இலங்கை மருத்துவர்கள் துறைசார் நிபுணத்துவத் திறனை காண்பித்துள்ளனர் – சீனா பாராட்டு!

0

இலங்கை மருத்துவர்கள் தமது துறைசார் நிபுணத்துவத் திறனைக் காண்பித்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக்கூடிய நோய் என்பதை இலங்கை மருத்துவர்கள் நிரூபித்துள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாப்பயண வழிகாட்டி முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிய செய்தியை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளது.

குறித்த மருத்துவக் குழாமுக்கு பாராட்டுக்களையும், குணமடைந்த சுற்றுலாப் பயண வழிகாட்டிக்கு வாழ்த்துக்களையும் கூறுகிறோம் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.