இலங்கை முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது! அரச மருத்துவ அதிகாரிகள்

0

கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் வைரஸ் பரவுவது தொடர்பாக இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் மத்தியில் இன்று கருத்துரைத்த அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் ஆசிரியர்- ஹரித அலுத்கே,

இலங்கைக்குள் கொரோனா கண்டறியப்பட்ட முதல் 9 மாதங்களுக்குள் 13 இறப்புகள் மட்டுமே பதிவாகின. எனினும் ஏனைய 11 மரணங்கள் 2 வார காலத்திற்குள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிள்ளார்.

கொரோனா தொடர்புடையது என்று தீர்மானிக்கும் சில இறப்புக்கள், பிரேத பரிசோதனையின் போது மட்டுமே அடையாளம் காணப்படுகின்றன.

இதனை சிலர் தங்களின் சொந்த வீடுகளிலேயே இறந்துவிட்டார்கள் என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஹரித்த அலுத்கே குறிப்பிட்டார்.

ஒருவருக்கு பீசீஆர் பரிசோதனையின்போது தொற்று இல்லையென்று முடிவு வந்தாலும் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பீசீஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதையே இந்த மரண சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பலியானவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் வைரஸ் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்துள்ளது என்பதை காணமுடிகிறது.

எனவே பொதுமக்கள் என்ற வகையில் ஆபத்தான அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் வைத்திய கலாநிதி அலுத்கே குறிப்பிட்டார்.