இலங்கை முழுவதும் இணைய சேவை வேகத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை

0

இலங்கையில் சமகாலத்தில் இணைய சேவை வேகத்தில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இணையம் ஊடாக தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நபர் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இணைய பாவனையாளர்கள் அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதற்கு தொலைதொடர்பு உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இதற்கு முன்னர் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அவதானம் செலுத்தப்படாமை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இணைய வேகத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், தகவல் தொழில்நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.