இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.