இலங்கை வங்கியின் 23 கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் ஹொரணை , இரத்மலானை , இங்கிரிய ,குருகொட, கொத்தட்டுவ , வெலிவேரிய கிளைகளும், மத்திய மாகாணத்தில் திகன , கண்டி பெரியாஸ்பத்திரி கிளைகளும், வடமத்திய மாகாணத்தின் ரம்பேவ கிளை , சபரகமுவ மாகாண கித்துல்கல கிளையும் , வடமேல் மாகாணத்தின் வாரியப்பொல ,நிக்கவரெட்டிய கிளைகளும், தென்மாகாணத்தின் காலி முதற்தர ,இமதுவ , யக்கலமுல்ல, பேலியத்தை.ஹம்பாந்தோட்டை ,மித்தெனிய கிளைகளும் ஊவா மாகாணத்தின் புத்தல ,எத்திலிவெவ ,அப்புத்தளை ,மொனராகலை ,பதுளை பிரதேச கடன் வழங்கல் நிலையம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டன.
கொரோனா நிலைமையால் எதிர்காலத்தில் வங்கிகள் இயங்கும் நேரங்களில் மாற்றங்களை செய்யவேண்டியேற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.