தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் முகக் கவசங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
அந்த வகையில் இலவசமாக வீதிகளில் மக்களுக்கு வழங்கப்படும் முகக் கவசங்களை தூய்மையானதா, தொற்று நீக்கம் செய்யப்பட்டதா என அறிந்து அதனை பாவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், முகக் கவசங்களை முறையற்ற ரீதியில் பாவிப்பதால் கூட கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவுவதற்க்கான ஏது நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக , ஒருவருடைய முகக்கவசத்தை வேறு நபர்கள் பாவித்தல் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் பாவிப்பது, முறையாக அதனை அகற்றி எரிக்கவோ, புதைக்கவோ படதா காரணிகளால் நோய்த்தொற்று அதிகரிக்கும் எனவும் சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.