இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும்.

0

கிராமங்களில் உள்ள இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு விளையாட்டு கழகங்கள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட மகிழூர் பயனியர் விளையாட்டு கழகத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்விலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஊரில் அல்லது பிரதேசத்தில் நிகழ்வொன்று நடைபெறும் போது அங்குள்ள இளைஞர்களை ஒன்றிணைப்பது கழகங்கள் மற்றும் அமைப்புக்களாகும். அவ்வாறானதொரு கழகம் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பது முக்கியமானதாகும்.

இந்த பெரும் பிரதேசத்தில் 04 கிராம சேவையாளர் பிரிவில் நாகபுரம் கிராமசேவையாளர் பிரிவில் விளையாட்டுக் கழகம் இல்லாமல் உள்ளது. அவர்களும் புதியதொரு விளையாட்டுக் கழமொன்றை உருவாக்குவதன் மூலம் இளைஞர், யுவதிகளிடையே சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர்களிடையே உறவு வலைப்பின்னலையும் மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.