நாட்டிலுள்ள இளைஞர்களின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடுத்தர வர்க்க வீட்டுத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க திட்டங்களின் ஒன்றான் இதன் ஊடாக 5000 வீடுகள் நடுத்தர வர்க்க மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் முறையாக 6.25% வருடாந்த நிவாரண வட்டிக்கு வழங்கப்படும் இந்த வீட்டிற்காக 30 வருட கட்டணம் செலுத்தும் காலம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் குறைந்தபட்ச பணம் செலுத்தி இந்த வீடு ஒன்றை கொள்வனவு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பேலியகொட, கொட்டாவை, பன்னிப்பிட்டி மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.