29 வயதில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்குகிறார் சாணக்கியன் – வாலிபர் முன்ணணி வரவேற்பு!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இரு இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அந்தவகையில்   நேற்று   தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தது. தமிழரசு கட்சி சார்பாக இரா.சாணக்கியனும், தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக இளம் வேட்பாளர்  ஒருவரும் இடம்பிடித்திருந்தனர்.

குறிப்பாக தமிழரசு கட்சியில்   29 வயதில் வேட்பாளராகும் சந்தர்ப்பத்தை இரா.சாணக்கியன் பெற்றுள்ளமையை   வாலிபர் முன்ணணி தலைவர் லோ. தீபாகரன் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,  “வாலிபர் முன்ணணியின் சார்பாக இரு வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளருக்கு தெரிவித்திருந்தோம்.

அதன்பிரகாரம் எமது கோரிக்கையை மதித்து  இரா.சாணக்கியனை தெரிவு செய்துள்ளமை வரவேற்கதக்கது.

இவருடைய  வெற்றிக்காக எமது வாலிபர் முன்ணணி பாடுபடும் , கடந்த காலங்களில் சாணக்கியனின் வேட்பாளர் தெரிவு குறித்தும், வாலிபர் முன்ணணி விருப்பமின்மை எனவும் அநாமோதய  செய்திகள் பல இணையத்தளங்களில்
வெளிவந்தன அவை உண்மைக்கு புறம்பானவை.

இரா.சாணக்கியன் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் தெரிவித்தார்.

காலத்திற்கேற்றவாறு வேட்பாளர்களை தெரிவு செய்து  தமிழரசு கட்சி வாய்ப்பளித்து வருகிறது இம்முறை  இளம் தலைமுறையினருக்கும் வாய்ப்பளித்துள்ளது.

இத்தெரிவானது நான்காவது ஆசனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நானும் உறுதிபடத்தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிருப்பு தொகுதியினருக்கு மட்டுமன்றி மட்டக்களப்பு இளைஞர் யுவதிகளின் வாக்குகளை கணிசமான அளவு பெறக்கூடியளவிற்கும், நெட்டிசன்களின் விமர்சனங்களிற்கு செவிசாய்த்து அதற்கு ஏற்றாற் போல் வேட்பாளரை தெரிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது என அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசியத்தின் இலக்கினை அடுத்த தலைமுறையினருக்கு சரியான முறையில் கையளிப்பதனூடாக தமிழ்  தேசிய இலக்கினை அடையலாம்.

தன்னார்வ  தொண்டு சேவைகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினூடாக முன்னெடுத்து வரும் சாணக்கியன்  அதனூடாக  கல்வி, விளையாட்டு, வறுமை போக்கும்  வாழ்வாதார உதவிகள்  போன்ற சமூக சேவைகளை தங்களது சொந்த நிதியினூடாக மக்களுக்கு செய்து வருகின்றார் எதிர்காலத்தில் அந்த அமைப்பினுடைய சேவைகளும் இன்னும் சிறப்பாக பன்மடங்காக அதிகரிக்கும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.