இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயரளவில் இல்லாது செயற்பட முன்வர வேண்டும்.

0

  இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவான அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அதே போன்று வெறுமனே இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற நாமம் தாங்கி அதை கெளரவத்திற்க்கு மாத்திரமே பயன்படுத்தாது முடிந்தவரை வாக்களித்த இளைஞர் சமூகத்திற்க்கு நன்மை செய்வதற்க்கு  செயற்பட்டு தளத்திற்க்கு முன் வரவேண்டும்.

கடந்த காலங்களில் நிறைவுபெற்ற நான்கு பாராளுமன்ற தொடர்களை பற்றி நான் நன்கறிவேன் அத்தோடு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டங்கள் பற்றியும் நான் நன்கறிவேன், எமது மாவட்டத்திலுள்ள பிரதேச சம்மேளனங்கள் பல திட்டங்களை முன்னெடுக்க நான் எனது அமைப்பினூடாக உதவிபுரிந்திருக்கிறேன்.

இளைஞர் கழகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற சிரமசக்தி வேலைத்திட்டம், யொவுன்புரய, இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் என்னபன  இந்த நாட்டு இளைஞர்களுக்கு குழுவாக தனியாக தமது திறமைகளை வெளிப்படுத்த நல்ல களம்.

அதே போல தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இளைஞர்களுக்கு சமூக சேவைக்காக வழங்கப்படுகின்ற  வெளிநாட்டு புலமைப்பரிசில் திட்டமும் அளப்பரியது.

இவ்வாறான திட்டங்களை வெகுமதிகளை கிராமமட்டம் வரை கொண்டு செல்ல இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை அர்ப்பணிக்க  முயற்சிக்க வேண்டும்.

இதனைத்தாண்டி தேவையான தொழில்வாய்ப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவுகளை  தயாரித்து பல வழிகளிலும் நிதி ஒதுக்கீடுகளை பெற்று கொண்டு வரவேண்டும். அதற்க்காக உதவ வழிகாட்ட நான் தயார் என்பதோடு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து இளைஞர் அபிவிருத்தியில் அர்ப்பணிப்போடு செயலாற்றவும் நானும் தயார்.

  2030ல் மட்டக்களப்பு மாவட்டத்தை சிறப்பான நிலைக்கு கொண்டுவரு என்னிடம் பல திட்டங்கள் உள்ளன இளைஞர்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்கிறார்கள் நான் சொல்கிறேன் நாம் இன்றும் தலைவர்கள்தான்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இளைஞர் பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரம் அல்ல போட்டியிட்டவர்கள் அனைவரும்  இளைஞர் அபிவிருத்தி செயதிட்டங்களை முன்னெடுக்க  முன் வரவேண்டும் என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன்.