இவ்வருடம் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை: போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

0

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் இவ்வருடம் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லையென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் பஸ் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதமளவில் பஸ் கட்டணங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்படும் நிலையில், எரிபொருள் விலையேற்றத்துடன் கடந்த வருடத்திற்கான பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்வருடம் முழுவதும் பஸ் கட்டணங்களை அதிகரிக்காது இருப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் சில சமயங்களில் எரிபொருட்களின் விலை அதிகரிப்படும் போது பெருமளவு தொகையினால் பஸ் கட்டணங்களை அதிகரிக்காது இருப்பதற்கே எதிர்பார்த்துள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.