ஈழத்தமிழர்கள் 31 பேரை நாடு கடத்தியது ஜேர்மனி!

0

கடும் எதிர்ப்பினை மீறியும் 31 ஈழத்தமிழர்களை ஜேர்மனி நாடு கடத்தியுள்ளது.

நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நாடு கடத்தலுக்கு எதிராக விமானநிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்காரணமாக இறுதி நேரத்தில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 31 பேர் கடும் எதிர்ப்பினையும் மீறி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.