ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது ஒருவர் கொதடுவ பகுதியிலும் மற்றுமொருவர் மட்டக்குளி பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தாக்குதலுக்கு உதவியவர் மட்டக்குளி பகுதியிலும், சினமன் கிராண்ட் தாக்குதல்தாரி கொதடுவ பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.