ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – தினேஸ் குணவர்தன

0

ஈஸ்டர் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவாதம் நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் முன்னர் குறிப்பிட்டப்படி விவாதம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தனவால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூல பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டன.