உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையிடும் கும்பல்! மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

0

இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து இந்த மோசடி சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கும்பலினால் மோசடியான முறையில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பெற்றுக் கொண்டு பின்னர் அவர்கள் வைப்பிட்டுள்ள பணத்தை அவர்களுக்கே தெரியாமல் கொள்ளையடிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.