உடனடி ஊரடங்குக்கு சாத்தியமில்லை எனத் தகவல்

0
கொழும்பிலோ அல்லது நாடளாவிய ரீதியிலோ உடனடி ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படும் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லையென அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றிய இரு பெண்களுக்கு குருநாகல் வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில், அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் அங்கிருந்து ஐ டி எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.