உணவுப் பொதிகளை விற்பனை செய்தவருக்கு கொரோனா

0

வத்தளை, ஹெந்தலை சந்தியில் உணவுப் பொதிகளை விற்பனை செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மனைவி பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் பணி புரிந்து வரும் நிலையில் அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த 03ஆம் திகதி வரை ஹெந்தலை சந்தியில் உணவுப் பொதிகளை விற்பனை செய்து வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த காலப்பகுதியில் அவரிடம் உணவுப் பொதிகளை பெற்றவர்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகருக்கு அல்லது பிரதேச சுகாதார அதிகாரிக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.