உண்மை தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

0

கொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், நோய் குறித்த சரியான தகவல்களை வழங்குவதே சாலச் சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் குறித்தான தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே மக்கள் இதுகுறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.