முன்மொழியப்பட்ட புதிய அரசமைப்பு திருத்தத்தின் மூலம் உப பிரதமர் பதவியை உருவாக்குவது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
இந்த விடயத்தை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும், கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவ்வாறான வாய்ப்புகள் காணப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19ஆவது அரசமைப்பு திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற அரசியல் மயமாக்கப்பட்ட நிறுவனங்கள் புதிய அரசமைப்பு திருத்தத்தில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.