க.பொ.த உயர்தர பரீட்சைக்குரிய பொது அறிவு பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொது அறிவு பரீட்சை தொடர்பில் கடந்த வருடாந்தம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் போது 30 புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளை பெற்றிருந்தால் மீண்டும் அந்த பரீட்சைக்கு தோற்ற அவசியமில்லை என அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சாத்திகள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து பரீட்சைகள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதோடு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளது.
முதற்தடவையாக இந்த முறை பொது அறிவு பரீட்சை எழுதவுள்ள பரீட்சார்த்திகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.