உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

0

கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த பரீட்சைகளை நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் புதிய பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், பெரும்பாலும் 2022 ஆம் ஆண்டு முற்பகுதியில் குறித்த பரீட்சைகள் நடத்தப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.