உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம்

0

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், எம்.எச்.எம். சித்திராநந்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தென், வடத்திய, மற்றும் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளதாகவும், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் முப்படைகள் மற்றும் சுகாதாரத் துறையினரைப் பயன்படுத்தி அனைத்து பாடாசலைகளையும் தொற்று நீக்கம் செய்வதோடு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை முதலில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய பாடசாலைகள் பணிப்பாளர், கித்சிரி லியகே தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர் தரம், அதன் பிறகு சாதாரண தரம், தரம் 10 மாணவர்கள் அதன் பின்னர் ஏனைய மாணவர்கள் என்ற ரீதியில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.