உயர் நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி – பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாளை ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான 17 மில்லியன் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று நடைபெறும் என்றும் அரச அச்சு திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.