உயிரிழந்த நபரின் உடலில் 27 நாட்களாக தங்கியிருந்த கொரோனா வைரஸ்!

0

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தில் 27 நாட்களின் பின்னரும் வைரஸ் இருந்ததாக அவுஸ்திரேலிய ஆய்வு குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மென்திக்கா வித்தானகே இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய கொரோனா வைரஸ், சடலத்தில் அல்லது அதற்கு வெளியே நீண்ட காலம் தங்கியிருக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை தெளிவுபடுத்திய பேராசிரியர் இது தொடர்பில் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பலராலும் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் இனம், பேதம் மற்றும் அரசியல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தி, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சடலம் தொடர்பில் மாற்று தீர்மானங்கள் எடுக்காமல் விஞ்ஞான ரீதியாக கடுமையாக சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களின் தகனங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விஞ்ஞான ரீதியாக பதிலளித்தவர், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலம் புதைப்பதற்கு தகுதியானதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.