உயிர்கொல்லி நோயில் இருந்து விடுபட கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூசை!

0

கொடிய கொரோனா வைரசிடம் இருந்து உலக மக்களைக் காப்பாற்ற வேண்டி மட்டக்களப்பில் கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட மன்றாட்ட பூசை நடத்தப்பட்டது.

சிலம்போசை நாயகியாம் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இந்த பூசைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டன.

உலகிலே வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் எனப்படும் உயிர்கொல்லி நோயில் இருந்து உலக மக்கள் விடுபடுவதற்காகவும் நிம்மதியைப் பெறவேண்டியும் இதன்போது பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த விசேட மன்றாட்ட பூசையில் ஆலய நிர்வாகத்தினர், பூசாரிகள் மட்டுமே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.