உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 97 எச்சரிக்கைகள் கிடைத்தன

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 97 எச்சரிக்கைகள் வந்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுகளுக்கு இவ்வாறு 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் வந்த போதிலும், பொறுப்பானவர்கள் அதன் மகத்துவத்தையும் ஆபத்தையும் கவனிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தாக்குதல் காரணமாக 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

நாட்டின் பாதுகாப்பிற்கு தேசிய பாதுகாப்பும் மிக முக்கியமானது. அவற்றைப் பாதுகாக்காமல் ஒரு நாடு முன்னேறவும் அபிவிருத்தி செய்யவும் இயலாது.

மேலும் நாட்டிற்கு மிகவும் தேவையான நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.