உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக வியாழேந்திரன் பொலிஸில் முறைப்பாடு

0

இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் ஜனன தின நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

இதன் பின்னர் இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முறைப்பாடு செய்துள்ளார்.