உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முடக்கப்பட்டுள்ளனர்!

0

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுகின்ற நிலையில் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருபகுதியினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

Covid-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏறக்குறைய 2 பில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் மூன்று வாரங்களுக்கு வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 3,434 ஐ எட்டியதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது பாதிப்புமிக்க நாடாக மாறியுள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் இதுவரையில் 6,820 இறப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 69,176 பேர் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.