உலர் உணவுப்பொருட்களை வழங்கினார் பர்வீஸ் மஹ்ரூப்

0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூப் நீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இன்று கையளித்துள்ளார்.

இதேபோன்று இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்தன ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கில் இவ்வாறான உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.