உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் வவுணதீவில் இருவர் கைது!

0

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு வுவுணதீவு பிரதேசத்தில் கைது செய்துள்ளதுடன் இரு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து  தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்ததுடன் இரு துப்பாக்கிகளை மீட்டனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.