ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இல்லை

0

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.