ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு

0

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு  யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இதன்போது, யாழ். ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் சீருடையிலும்  சிவில் உடையிலும் குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பாக கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.