ஊரடங்குச் சட்டத்தை மீறிய பத்தாயிரத்து 730 பேர் இதுவரையில் கைது

0

ஊரடங்குச் சட்டத்தை மீறிய பத்தாயிரத்து 730 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாயிரத்து 657 வாகனங்களை இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 325 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.