ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37 ஆயிரம் பேர் கைது!

0

முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தவகையில் மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 9650 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.